search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் பறிமுதல்"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர்.
    • அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைச்சாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.

    மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சிறைக்காவலர்கள் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். எண்ணூர் தனசேகரன் இருந்த அறையிலிருந்து மீண்டும் சிறைக்காவலர்கள் செல்போன் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புழல் விசாரணை சிறையில் 1700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    செங்குன்றம்:

    சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 1700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தாம்பரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் (வயது 27) என்பவரும் கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைதாகி இங்கு அடைக்கப்பட்டு உள்ளார்.

    நேற்று இரவு சிறை போலீசார், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைதி சரவணன், தனது அறையில் உள்ள கழிப்பறையில் அமர்ந்து கொண்டு யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதிக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? அந்த செல்போனில் அவர் யாருடன் பேசினார்? என விசாரித்து வருகின்றனர்.

    • அதிநவீன செல்போன் மூலம் கைதிகள் தொடர்ந்து தங்களது கூட்டாளிகளிடம் பேசி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சோதனை நடத்தியபோது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் பெரும்பாலான குற்ற சம்பவங்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் தங்களது கூட்டாளிகள் மூலம் செய்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தனர்.

    கைதிகள் ஜெயிலில் இருந்தபடியே தங்களது கூட்டாளிகளுக்கு செல்போனில் பேசி எதிராளிகளை தீர்த்துக்கட்டுவது மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் தெரிவித்து வந்தனர்.

    இதனையடுத்து ஜெயிலில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. ஆனாலும், அதிநவீன செல்போன் மூலம் கைதிகள் தொடர்ந்து தங்களது கூட்டாளிகளிடம் பேசி வருகின்றனர்.

    இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஜெயிலில் கைதிகளின் அறைகளில் அடிக்கடி சோதனை நடத்தி அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதனை மீறியும் கைதிகள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சோதனை நடத்தியபோது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஜெயிலில் கைதிகளின் அறைகளில் ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஜெயில் வார்டன்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரவீன்குமார் என்பவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை நடத்தியபோது அங்குள்ள கழிவறையில் செல்போன் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூந்தமல்லி தனி கிளை சிறை வார்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பூந்தமல்லி போலீசார் நிஜாம் அலிக்கு செல்போன், பேட்டரிகளை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    கும்பகோணம் அடுத்த திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஜாம் அலி என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இன்று பூந்தமல்லி தனி கிளை சிறை வார்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிஜாம் அலி தங்கி இருந்த அறையில் செல்போன், சார்ஜர், பேட்டரி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த சிறை காவலர்கள் இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் நிஜாம் அலிக்கு செல்போன், பேட்டரிகளை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • 7-வது பிளாக் பகுதியில் ரோந்து
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சோதனைகள் செய்யப்படுகிறது.

    ஜெயில் வளாகத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையும் மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று ஜெயிலர் மோகன் குமார் என்பவர் 7-வது பிளாக் பகுதியில் ரோந்து சென்றார்.

    அங்குள்ள கழிவறைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு ஒரு செல்போன் பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தனர். அதனை மோகன்குமார் பறிமுதல் செய்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் செல்போன் பயன்படுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருட்டு போனது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்த சவுந்திரராஜன்(வயது 25) அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

    இந்த நிலையில் பெரம்பலூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார், பெரம்பலூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன்(25) என்பதும், அவர் பெரம்பலூர் ரோஜா நகரை சேர்ந்த வேல்முருகன் மனைவி எழிலரசி(39), நேரு நகரை சேர்ந்த வசந்தா(30) ஆகியோரிடம் நகைகளும், பெரம்பலூரில் மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தில் செல்போன் மற்றும் மங்களமேடு பகுதியில் வீடுபுகுந்து நகை ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். 

    மேலும் அவரிடம் இருந்து 14½ பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிரபாகரன் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
    மூர்மார்க்கெட் கடைகளில் ஆவணம் இன்றியும் பாதிவிலைக்கு விற்பனை செய்த 794 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் ஏராளமான செல்போன் விற்பனை கடைகள் உள்ளன. இங்கு விலை உயர்ந்த புதிய செல்போன்கள், பழைய செல்போன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், உரிய ஆவணங்கள் இன்றியும், பழைய செல்போன்கள் புதிய செல்போன்களாக மாற்றி விற்கப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல கடைகளில் உரிய ஆவணம், பில் இல்லாமல் செல்போன்கள் விற்கப்படுவது தெரியவந்தது.

    அவர்களிடம் இருக்கும் பழை செல்போன்களை யாரிடம் இருந்து வாங்கப்பட்டது. என்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

    இதைத் தொடர்ந்து 794 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பற்றி கடை உரிமையாளர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொள்ளை கும்பல் தாங்கள் பறிக்கும் செல்போன்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே கடைகளில் திருட்டு செல்போன்கள் வாங்கப்படுகிறதா? அவை எவ்வாறு புதிய செல்போனாக மாற்றப்படுகிறது. என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    புழல் ஜெயலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வழப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    மாதவரம்:

    புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கைதியிடம் மீண்டும் செல்போன் சிக்கி உள்ளது.

    புழல் ஜெயிலில் நேற்று காலை ஜெயிலர் உதய குமார் மற்றும் அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை செய்தனர். அப்போது வழிப்பறி வழக்கில் கைதான நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யாவின் அறையில் செல்போன் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி? ஜெயில் ஊழியர்கள் உதவினார்களா? யார்-யாருடன் பேசி உள்ளார் என்று விசாரித்து வருகிறார்கள்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #PuzhalJail
    பெண்ணிடம் செல்போன் பறித்து தப்பிய கொள்ளையர்கள் விபத்தில் சிக்கியதால் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழாஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரி. பனியன் தொழிலாளி, இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவதன்று லோகேஸ்வரி வேலை முடிந்து பஸ்சுக்காக மங்கலம் சாலை, தாடிகார முக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் லோகேஸ்வரி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்ற போது, லோகேஸ்வரி திருடன்...திருடன்.. என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் கொள்ளையர்களை விரட்டியுள்ளனர். இதனிடையே செல்போனை பறித்த வேகத்திலும், பொது மக்கள் விரட்டிய பதட்டத்தில் சென்ற கொள்ளையர்கள் சிறிது தூரத்தில் வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து மத்திய போலீசார் கொள்ளையர்கள் இரண்டு பேரிடம் நடத்தி விசாரனையில் , பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த வெங்காளீஸ்வரன் மற்றும் சூரியகுமார் என்பதும், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    புழல் ஜெயிலில் இன்று காலை 3 கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கைதிகள் சர்வ சாதாரணமாக செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள்.

    கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 3 கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    ஜெயில் அறையில் இருந்த கைதிகளை சிறைக்காவலர்கள் கண்காணித்தனர். அப்போது நீலாங்கரையை சேர்ந்த கஞ்சா வழக்கில் கைதான கார்த்திக், வழிப்பறி வழக்கில் கைதான கோயம்பேட்டை சேர்ந்த விஜயகுமார், முத்தையால் பேட்டையை சேர்ந்த கணேஷ்லிங்கம் ஆகியோர் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், சிம்கார்டு, சார்ஜர், பேட்டரி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? யாரிடம் பேசினார்கள்? செல்போன் கிடைக்க உதவிய ஜெயில் அதிகாரி யார்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    ×